தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக festival de musique நிகழ்வுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன கொரோனா வைரஸ் காரணமாக 2020 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாபெரும் இசை திருவிழா இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் வரும் ஜூன் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையான மூன்று நாட்கள் festival de musique நிகழ்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் அந்த நிகழ்வும் இரத்துச் செய்யப்படுவதாக இன்று புதன்கிழமை அதன் ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இந்நிகழ்வு தற்போது இரத்துச் செய்யப்படுகின்றது 2019 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற்ற festival de musique நிகழ்வில் 230,000 பேர் வரை கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.