இந்த சிகிச்சை மையம் 75 வயதுக்கு மேற்பட்ட 'ஆபத்தான' நிலையில் உள்ளவர்களுக்காக பிரத்யேகமாக திறக்கப்பட்டுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். Bobigny நகரின் avenue de la Convention இல் இந்த புதிய சிகிச்சை மையம் நேற்று பெப்ரவரி 15 ஆம் திகதி திறக்கப்பட்டது.
இவ்வாரத்தில் 500 இற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை மேற்கொள்ள உள்ளதாக சிகிச்சை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 700 பேர் வரையானவர்கள் இவ்வாரத்தில் பயனடைய உள்ளனர் என சிகிச்சை மையத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Seine-Saint-Denis மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள 18 ஆவது கொரோனா சிகிச்சை மையம் இதுவாகும்.