ஐரோப்பாவும் அமெரிக்காவும், ஆபிரிக்காவிற்கு 13 மில்லியன் கொரோனாத் தடுப்பு ஊசிகளை மிகவும் விரைவாக வழங்கவேண்டும்» என பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

«இதன் மூலம் மட்டுமே, ஆபிரிக்கா உடனடியாக, மருத்துவத்துறையினர்க்கான தடுப்பு ஊசிகளைப் போடமுடியும். இதற்கு மேற்குலகம் உறுதியான நம்பிக்கையை வழங்கவேண்டும்»

«நாங்கள் ஆபிரிக்காவிற்கு கொரோனத் தடுப்பு ஊசிகளை வழங்குவதைத் தாமதித்தால், ஆபிரிக்கா மேற்குலகின் நம்பிக்கையை இழந்து விடும். அதன் பின்னர்; அவர்கள் சீனாவிடமிருந்து, அல்லது ரஸ்யாவிடம் இருந்து கொரோனத் தடுப்பு ஊசிகளைப் பெற்று விடுவார்கள். நாங்கள் இதனைத் தடுக்க வேண்டும்»

எனவும் எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

கொரேனாத் தடுப்பு ஊசியில் பெரும் அரசியல் கலந்துள்ளது. ரஸ்யாவினதும் சீனாவினதும் கொரோனத் தடுப்பு ஊசிகளை அங்கீகரிக்க ஐரோப்பிய ஒன்றியம் மறுத்து வருகின்றது. இதில் எமானுவல் மக்ரோனின் தீவிர கொரோனா வியாபார அரசியல் தலை தூக்கி உள்ளது.