காவல்துறையினரின்  கண்காணிப்பு வாகனத்தின் மீது 30 பேர் கொண்ட குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. 
 
 சனிக்கிழமை நண்பகல் Poissy, (Yvelines) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கண்காணிப்பு வானகத்தில் காவல்துறையினர் பயணித்துக்கொண்டிருக்கும் போது, 30 பேர் கொண்ட குழு ஒன்று அவர்களை சுற்றி வளைத்துள்ளது. 
 
பின்னர் காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டுள்ளது. அத்தோடு பட்டாசுகள் கொழுத்தப்பட்டு அதிகாரிகளின் வாகனம் மீது வீசப்பட்டுள்ளது. 
 
அதிஷ்ட்டவசமாக அதிகாரிகள் எவரும் காயமடையவில்லை. மேலதிக காவல்துறையினர் அழைக்கப்பட்டபோது தாக்குதல் நடத்திய நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.