வைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 56.040 பேர் சாவடைந்துள்ளனர். முதியோர் இல்லங்களில் மட்டும் 23.383 பேர் சாவடைந்துள்ளனர்
நேற்றைய தரவுகள் தரப்படாத நிலையில், கடந்த 24 மணி நேரத்திற்குள் 4.317 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகளில் வழமையான முழுமையற்ற தகவல்களே வெளிவருவது வழமை
இதனால் பிரான்சில் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.341.365 ஆக உயர்ந்துள்ளது.
28.037 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளிற்கு நாள் உச்சத்தை எட்டுகின்றது.
3.363 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.