இல் து பிரான்சுக்குள் பிரித்தானிய கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டை மீறி வேகமாக பரவி வருகின்றது. 
 
இல் து பிரான்சுக்கான பிராந்திய சுகாதார நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 37.7 % வீதம் பிரித்தானிய பிரிவு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. les laboratoires Biogroup எனும் ஆய்வகத்தினரால் 7.000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளியானது. அதிலேயே இந்த தொற்று வீதம் தெரியவந்துள்ளது.  
 
கடந்தவாரத்தில் இல் து பிரான்சுக்குள் பிரித்தானிய தொற்று வீதம் 24% ஆக இருந்த நிலையில், இவ்வாரத்தில் அது 37.7% வீதமாக அதிகரித்துள்ளது. 
 
அதிகபட்சமாக Yvelines மாவட்டத்தில் 52% வீத தொற்றும், Val-de-Marne மாவட்டத்தில் 47% வீத தொற்றும், Hauts-de-Seine மாவட்டத்தில் 43% வீத தொற்றும் ஏற்பட்டுள்ளது. 
 
அதேவேளை பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க பிரிவு கொரோனா வைரஸ் வெறுமனே 2.7% வீதம் மாத்திரமே இல் து பிரான்சுக்குள் பரவியுள்ளது.