பிரான்சில் 6 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (16.02.2021) 412 பேர் சாவடைந்திருக்கும் நிலையில்,    இல்-து-பிரான்சில் மட்டும் 64 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 14.196  ஆக உயர்ந்துள்ளது.

இங்கு 5.090  பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரசிகிச்சைப் பிரிவில் 741பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 64% ஆகும்.

100.000 பேரிற்கான கொரோனாத் தொற்று விகிதம் ( taux d'incidence) இல்-து-பிரான்சில் 236 ஆக உயர்ந்துள்ளது. இல்-து-பிரான்சில் நாளிற்கு நாள் தொற்று வீதம் அதிகரிக்கின்றது.. (200 இற்கு மேல் ஆபத்தான நிலைமையாகும்).


இல்து-பிரான்சின் மாவட்டங்களில்

    Paris - வைத்தியசாலையில்  894 பேர் -   3.079 பேர் சாவு  (+14)
    La Seine-Saint-Denis - வைத்தியசாலையில்  669 பேர் - 1.726 பேர் சாவு (+8) 
    Le Val-de-Marne- வைத்தியசாலையில் 597 பேர் - 2.135பேர் சாவு (+9) 
    Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் 866  பேர் -  1.902 பேர் சாவு (+8) 
    Les Yvelines- வைத்தியசாலையில்  611 பேர் - 1.303 பேர் சாவு (+5)
    Le Val-d'Oise- வைத்தியசாலையில்  398 பேர் - 1.363 பேர் சாவு (+4)
    L'Essonne- வைத்தியசாலையில்  648  பேர் -  1.288பேர் சாவு (+8)
    La Seine-et-Marne - வைத்தியசாலையில்  407 பேர் -  1.400 பேர் சாவு (+8)