கடந்த 24 மணி நேரத்திற்குள் வைத்தியசாலைகளிலும் முதியோர் இல்லங்களிலுமாக 724 பேர் சாடைந்துள்ளனர். இதனால் மொத்தச் சாவுகள் 80.000 இனைத் தாண்டியுள்ளது. வைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 56.476 பேர் சாவடைந்துள்ளனர். முதியோர் இல்லங்களில் மட்டும் 23.671 பேர் சாவடைந்துள்ளனர்

கடந்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் 18.870 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.360.235 ஆக உயர்ந்துள்ளது.

27.677 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளிற்கு நாள் உச்சத்தை எட்டுகின்றது.

3.342 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது. கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் 1.926 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 333 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.