பிரான்சில், வைத்தியசாலைகளிலுள்ள மருத்துவத்துறையினர்க்கும், தனியார் மருத்துவர்களிற்கும், கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வரும் நிலையில், அவர்களிற்கு AstraZeneca தடுப்பு ஊசிகள் மட்டுமே தற்போது போடப்பட்டு வருகின்றது.

கிட்டத்தட்ட 70.000  AstraZeneca தடுப்பு ஊசிகள் தனியார் மருத்துவர்களிற்காக, இன்று முதல் மருந்தகங்களிற்கு விநியோகம் செய்யப்படுகின்றது. மருந்தகப் பணியாளர்கள் தாங்களும் கொரோனாத் தடுப்பு ஊசிகள் போட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் பிரான்சின் அரசாங்கம் இன்னமும் AstraZeneca கொரோனத் தடுப்பு ஊசிகளின் பக்கவிளைவுகளைப் பற்றிய தரவுகளைப் பெற்றிருக்கவில்லை. 
ஆனாலும் 22.000 மருத்துவர்கள் தாங்களாக முன்வந்து இந்தத் தடுப்பு ஊசிகளைப் போட முன்வந்துள்ளனர்.

இதுவரை 67.286 மருத்துவத் துறையினர்க்கு, AstraZeneca தடுப்பு ஊசிகள் போடப்பட்டிருந்தாலும், பக்க விளைவுகளின் அச்சத்தால் ஒவ்வொரு பிரிவிலும் சிலரிற்கு மட்டுமே ஊசிகள் போட்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.