பயணச்சிட்டை இன்றி பயணிப்போருக்கான குற்றப்பணம் அதிகரிக்கப்பட உள்ளதாக Île-de-France Mobilités அறிவித்துள்ளது.



தற்போது €50 யூரோக்களாக உள்ள கட்டணத்தை விரைவில் €70 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது. €50 யூரோக்கள் குற்றப்பணம் மோசடிக்காரர்களுக்கு சிறிய தொகையாக இருக்கிறது. அது குற்றத்தைச் செய்ய தூண்டுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

குற்றப்பணத்தை அதிகரிப்பதூடாக மோசடிகளை தடுக்க முடியும் என Île-de-France Mobilités தெரிவிக்கிறது. அதேவேளை, மோசடிகளைக் கண்காணிக்க அதிகளவான அதிகாரிகளை நியமிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.