பிரான்சிலும் ஐரோப்பாவில் சில நாடுகளிலும் Coca-Cola மற்றும் Fuze Tea ஆகிய இரு பென்பானங்களும் மீளப்பெறப்படுகிறமை அறிந்ததே.

Coca-Cola !
டிசம்பர் 11, 2024 தொடக்கம் ஜனவரி 20, 2025 வரையான காலப்பகுதிக்குள் விநியோகிக்கப்பட்ட Coca-Cola மென்பானங்களே மீளப்பெறப்படுகின்றன. ஒரு லிட்டர் கண்ணாடிப்போத்தல்களும், sugar-free போத்தல்களும் மீளப்பெறப்படுகின்றன.


Fuze Tea!!

டிசம்பர் 12, 2024 தொடக்கம் ஜனவரி 21, 2025 வரையான காலப்பகுதிக்குள் பொதி செய்யப்பட்ட தொகுதி இலக்கம்
337GE10002 தொடக்கம் 337GE10038 வரையான Fuze Tea டின்கள் மீளப்பெறப்படுகின்றன.


மேற்படி மென்பானங்களில் அதிகளவு குளோரைட் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு மீளப்பெறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.