இல் து பிரான்சுக்குள் இயங்கி வரும் அமெரிக்காவின் மிகப்பெரிய கோலா நிறுவனமான Coca Cola விற்கு தேவையான தண்ணீரினைப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இல் து பிரான்சுக்குள் Clamart, (Hauts-de-Seine) மற்றும் Grigny (Essonne) ஆகிய நகரங்களில் கொகாகோலா நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. Water Table எனப்படும் நிலத்தடி நீரை சுத்திகரித்து மேற்படி நிறுவனம் தங்களுக்குத் தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்கிறது. பெருமளவான தொகையில் தண்ணீரை மேற்படி நிறுவனம் ஆண்டுக்கு 750.000 m3 (Cubic Metre) தணீரை உறிஞ்சி வரும் நிலையில், Grigny நகர முதல்வர் இதற்கு தடை ஒன்றைக் கொண்டுவர முற்பட்டுள்ளார்.

கொகா கோலா நிறுவனத்தினர் நிலத்தடி நீருக்குப் பதிலாக மெற்றோ குடிநீரைப் பயன்படுத்த ஆலோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் கொகா கோலா உருவாக்க 1.27 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே செல்வதால் உடனடியாக இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் மேற்படி கோரிக்கையை அவர் முன்மொழிந்துள்ளார்.