இன்று வியாழக்கிழமை இடம்பெற உள்ள வேலை நிறுத்தம் காரணமாக போக்குவரத்து தடை ஏற்பட உள்ளது. செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த போக்குவரத்து தடை இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது.

Métro!

✅ முதலாம் இலக்க மெற்றோ தடையின்றி பயணிக்கும்.

⚠️ இரண்டாம் இலக்க மெற்றோ நண்பகல் வரை வழமை போல் இயங்கும். நண்பகலின் பின்னர் மூன்றில் இரண்டு தடைப்படும்.

⚠️ மூன்றாம் இலக்க மெற்றோ நண்பகலுக்கு முன்னதாக இரண்டில் ஒன்றும், நண்பகலின் பின்னர் மூன்றில் ஒன்றும் தடைப்படும்.

✅ 3bis சேவைகள் தடையின்றி பயணிக்கும்.

✅ நான்காம் இலக்க மெற்றோ இரவு 10.15 மணி வரை தடையின்றி பயணிக்கும்.

⚠️ ஐந்தாம் இலக்க மெற்றோ நண்பகல் வரை தடையின்றி பயணிக்கும். நண்பகலின் பின்னர் நான்கில் மூன்று தடைப்படும்.

⚠️ ஆறாம் இலக்க மெற்றோ நண்பகல் வரை நான்கில் மூன்றும், நண்பகலின் பின்னர் மூன்றில் இரண்டும் தடைப்படும்.

⚠️ ஏழாம் இலக்க மெற்றோ நாள் முழுவதும் மூன்றில் இரண்டு தடைப்படும்.

✅ 7bis சேவைகள் தடையின்றி பயணிக்கும்.

⚠️ எட்டாம் இலக்க மெற்றோ நாள் முழுவதும் மூன்றில் ஒன்று தடைப்படும்.

✅ ஒன்பதாம் இலக்க மெற்றோ தடையின்றி இயங்கும்.

⚠️ பத்தாம் இலக்க மெற்றோ நாள் முழுவதும் இரண்டில் ஒன்று தடைப்படும்.

⚠️ பதினோராம் இலக்க மெற்றோ நண்பகல் வரை தடையின்றி பயணிக்கும். நண்பகலின் பின்னர் மூன்றில் இரண்டு தடைப்படும்.

⚠️ பன்னிரெண்டம் இலக்க மெற்றோ நண்பகல் வரை தடையின்றி பயணிக்கும். நண்பகலின் பின்னர் மூன்றில் இரண்டு தடைப்படும்.

⚠️ பதின்மூன்றாம் இலக்க மெற்றோ இரவு 8 மணி வரை இயங்கும். இரண்டில் ஒன்று தடைப்படும்.

✅ 14 ஆம் இலக்க மெற்றோ இரவு 10 மணி வரை தடையின்றி பயணிக்கும்.

******

RER!

⚠️ RER A சேவைகள் நாள் முழுவதும் நான்கில் மூன்று தடைப்படும்.

⚠️ RER B சேவைகள் நெருக்கடியான வேலை நேரத்தில் இரண்டில் ஒன்று தடைப்படும். ஏனைய நேரத்தில் மூன்றில் இரண்டு தடைப்படும். Gare du Nord நிலையத்தின் உள்ளக இணைப்பு (Interconnexion) முற்றாக தடைப்படும்.
******

BUS!

✅ பேருந்துகள் தடையின்றி பயணிக்கும்.
*****

Tramway!

✅ அனைத்து ட்ராம் சேவைகளும் தடையின்றி பயணிக்கும்.