நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள தொழிலாளர் வேலை நிறுத்தத்தை அடுத்து, இல் து பிரான்ஸ் உட்பட நாடளாவிய ரீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக மெற்றோ மற்றும் RER சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட உள்ளன. அவை தொடர்பான விரிவான தகவல்கள் இங்கே!
******
மெற்றோ!
✅ முதலாம் இலக்க மெற்றோ தடையின்றி பயணிக்கும்.
⚠️ இரண்டாம் இலக்க மெற்றோவில் - நெருக்கடியான வேலை நேரத்தில் மூன்றில் 1 சேவைகள் மட்டுமே இயங்கும்.
⚠️ மூன்றாம் இலக்க மெற்றோவில் Pont de Levallois மற்றும் Havre-Caumartin நிலையங்களுக்கிடையே காலை 6.30 தொடக்கம் 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி தொடக்கம் 7.30 மணி வரையும் பயணிக்கும்.
⚠️ 3bis சேவைகளில் காலை நேரத்தில் மட்டும் மூன்றில் ஒரு சேவை இயங்கும்.
✅ நான்காம் இலக்க மெற்றோ இரவு 10.30 மணிவரை தடையின்றி இயங்கும்.
⚠️ ஐந்தாம் இலக்க மெற்றோ காலை 6.30 தொடக்கம் 9.30 மணி வரை மூன்றில் ஒரு சேவையும், மாலை 4.30 மணியில் இருந்து 7.30 மணி வரை நான்கில் ஒரு சேவையும் இயங்கும்.
⚠️ ஆறாம் இலக்க மெற்றோ நெருக்கடியான வேலை நேரத்தில் மூன்றில் ஒரு சேவையும், ஏனைய நேரத்தில் நான்கில் ஒரு சேவையும் இயங்கும்.
⚠️ ஏழாம் இலக்க மெற்றோ நெருக்கடியான வேலை நேரத்தில் மட்டும் நான்கில் ஒரு சேவை இயங்கும்.
⚠️ 7bis சேவைகள் நெருக்கடியான வேலை நேரத்தில் இரண்டில் ஒரு சேவை இயங்கும்.
⚠️ எட்டாம் இலக்க மெற்றோ Créteil Pointe du Lac மற்றும் Reuilly Diderot நிலையங்களிடையே, நெருக்கடியான வேலை நேரத்தில் மூன்றில் ஒரு சேவை இயங்கும்.
⚠️ ஒன்பதாம் இலக்க மெற்றோ காலை 6.30 தொடக்கம்10 மணி வரையும், மாலை 4.30 தொடக்கம் 8 மணி வரையும் மூன்றில் ஒரு சேவை இயங்கும்.
⚠️ பத்தாம் இலக்க மெற்றோ காலை 6.30 தொடக்கம் 9.30 மணி வரையும், மாலை 4.30 தொடக்கம் 7.30 மணி வரையும் மூன்றில் ஒரு சேவை இயங்கும்.
⚠️ பதினோராம் இலக்க மெற்றோ சேவைகள் காலை 6.30 தொடக்கம் 9.30 மணி வரை மூன்றில் ஒரு சேவையும், Belleville மற்றும் Mairie des Lilas நிலையங்களிடையே மாலை 4.30 தொடக்கம் 7.30 மணி வரை மூன்றில் ஒரு சேவையும் இயங்கும்.
⚠️ பன்னிரெண்டாம் இலக்க மெற்றோ Mairie d'Issy மற்றும் Concorde நிலையங்களுக்கிடையே காலை 6.30 தொடக்கம் 9.30 மணி வரையும், மாலை 4.30 தொடக்கம் 7.30 மணி வரையும் நான்கில் ஒரு சேவைகள் இயங்கும்.
⚠️ பதின்மூன்றாம் இலக்க மெற்றோ நெருக்கடியான வேலை நேரத்தில் மூன்றில் ஒரு சேவை இயங்கும்.
✅ பதின்நான்காம் இலக்க மெற்றோ இரவு 10 மணி வரை தடையின்றி பயணிக்கும். 
********
RER!
⚠️ RER A சேவைகள் மூன்றில் ஒன்று இயங்கும்.
⚠️ RER B சேவைகள் வடக்குப் பகுதியில் மட்டும் மூன்றில் ஒரு சேவை இயங்கும். Gare du Nord நிலையத்தில் interconnection நாள் முழுவதும் தடைப்படும்.
⚠️ RER C சேவைகளில் Paris Austerlitz மற்றும் Pontoise/Saint-Quentin நிலையங்களுக்கு இடையிலும், Yvelines/Versailles Rive Gauche நிலையங்களுக்கிடையிலும் ஐந்தில் ஒரு சேவை இயங்கும்.
⚠️ RER D சேவைகளில் ஐந்தில் ஒரு இயங்கும். Châtelet மற்றும் Gare de Lyon நிலையங்களிடையே சேவைகள் தடைப்படும்.
⛔️ RER E சேவைகளில் பத்தில் ஒரு சேவை மட்டுமே இயங்கும்.