காவல் நிலைய சுற்றுச்சுவரின் மீது பலமுறை துப்பாக்கியால் சுட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
21 வயது இளைஞர் ஒருவர் ஷார்ட் கட் எனப்படும் துப்பாக்கியை கொண்டு கிளிஷி-சு-புவா காவல் நிலையத்தின் சுவரின் மீது மூன்று, நான்கு முறை சுட்டுள்ளார்.
குறிப்பாக சுற்றுச்சூழின் மீது இருந்த கண்காணிப்பு கேமராக்களை நோக்கி சுட்டுள்ளார். அப்போது அருகே இருக்கும் டிராம் வேயில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்ய முற்பட்டுள்ளனர்.
ஆனாலும் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த அடையாளங்களை வைத்து காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவினர் அவர் யார் என்பதை கண்டுபிடித்தனர். அதனை வைத்து அவர் இருந்த அழைக்கி சென்ற காவல்துறையினர் அங்கிருந்து நபரை கைது செய்தனர்.
அவர் வீட்டில் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்திய துப்பாக்கியையும் கத்தியையும் கைப்பற்றியுள்ளனர்.