மர்சேயில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு தேடுதல் நடவடிக்கையின் போது கஞ்சா, துப்பாக்கிகள், சொகுசு கார்கள், ஏராளமான பணம் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மர்செய் காவல்துறையினர் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையை செயல்படுத்தினர்.
இந்த காவல் துறை தேடுதல் நடவடிக்கையில் 280 காவல்துறையினரும், போதைப் பொருளை கண்டுபிடிக்க வல்ல மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
Cité Campagne-Lévêque (15th) எனுமிடத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் துப்பாக்கிகள், கஞ்சா, ஏராளமான சொகுசு கார்கள் மற்றும் மூன்று லட்சம் யூரோக்கள் பணமும் கைப்பற்றப்பட்டன.
அண்மை காலங்களில் மர்செயில் ஏராளமான குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்ததையடுத்து, போதைப்பொருள் மட்டும் ஆயுத கடத்தலை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை நடைபெற்ற காவல் துறை சோதனையில் 16 சண்டை துப்பாக்கிகள், 4 கை துப்பாக்கிகள், 37.5 கிலோ கஞ்சா, 333,990 யூரோக்கள் பணம் மற்றும் 77 ஆயிரம் யூரோக்கள் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ சொகுசு கார் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகியது குறிப்பிடத்தக்கது.