ஐரோப்பிய வான் சேவைகளில்
மாஸ்க் கட்டுப்பாடு நீங்குகிறது
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விமா
னங்கள் மற்றும் விமான நிலையங்களில்
மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற விதி அடுத்த வாரம் முதல் நீக்கப்படுகிறது.
ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு முகவ
ரகம் (European Aviation Safety Agency - EASA) இதனை அறிவித்திருக்கிறது.
எனினும் கொரோனா வைரஸ் தொற்
றில் இருந்து பாதுகாப்புப் பெற மாஸ்க் பிரதான தடுப்பு முறை என்பதை நினை
வூட்டியிருக்கும் அந்த நிறுவனம், நோயா
ளிகள் மற்றும் பலவீனமானவர்கள் தொட
ர்ந்தும் மாஸ்க் அணிவது ஊக்கப்படுத்தப்
படும் என்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரான்ஸில் ரயில், பஸ்
போன்ற பொதுப் போக்குவரத்துகளில்
கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்
என்ற சுகாதார விதி எதிர்வரும் திங்கட்
கிழமை முதல் நீக்கப்படுகிறது. எனினும்
மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை
நிலையங்களில் அதனை அணிவது
தொடர்ந்து கட்டாயமாக இருக்கும் என்று
சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன்
தெரிவித்திருக்கிறார்.
பொது இடங்களில் மாஸ்க் அணிவது
கடந்த மார்ச் 14 முதல் முதல் முற்றாக
நீக்கப்பட்டிருந்த போதிலும் மெற்றோ
ரயில்கள் உட்படப்பொதுப் போக்குவரத்து
களில் அந்த விதி தொடர்ந்தும் பேணப்
பட்டு வந்தது.