பரிசில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இத்துப்பாக்கிச்சூட்டினை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். காவல்துறையினரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், Pont-Neuf பகுதியில்- மகிழுந்து ஒன்று வீதியின் எதிர் திசையில் பயணித்ததாகவும், அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முற்பட்டபோது - அதிகாரிகள் மீது மகிழுந்தினால் மோதுவதற்கு முற்பட்டதகவும், அதையடுத்தே அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துப்பாக்கிச்சூட்டில் மகிழுந்தில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்றாம் நபர் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் எனவும் அறிய முடிகிறது.
இன்று அதிகாலை 1.30 மணிக்கு இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணைகளை காவல்துறையினரை கண்காணிக்கும் படையினரான IGPN அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.