Sevran, Aulnay-sous-Bois ஆகிய நகரங்களில் நேற்று இரண்டாவது நாளாக வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறையின் போது நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று திங்கட்கிழமை இரவும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது 11 குப்பைத் தொட்டிகள் நடு வீதியில் வைத்து எரியூட்டப்பட்டுள்ளது. 4 வாகனங்களும் எரிக்கப்பட்டுள்ளன.

உடற்பயிற்சிக் கூடம் ஒன்றும் எரிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகச் செய்துள்ளனர். காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தின் முடிவில், இன்று காலை 7.30 மணி அளவில் 13 பேர் வரை கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
**

கடந்த சனிக்கிழமை Sevran பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சாரதி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

காவல்துறையினரின் இச்செயலை கண்டித்தே இந்த வன்முறைகள் இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகிறது.