நேற்று புதன்கிழமை இரவு மகிழுந்து ஒன்றுக்குள் இருந்து, பெண் காவல்துறை அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Avrainville, (Essonne) நகரில் உள்ள துரித உணவகம் (fast food) ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. Évry நகர காவல்நிலையத்தில் பணிபுரியும் 43 வயதுடைய பெண் காவல்துறை அதிகாரி ஒருவர், துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இது ஒரு தற்கொலை என முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் 12 மற்றும் 16 வயதுடைய இரு பிள்ளைகளின் தயார் எனவும், தனது சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் இவ்வருடத்தில் இடம்பெறும் 21 ஆவது காவல்துறை அதிகாரியின் தற்கொலை இதுவாகும்.