பிரான்சில் இளைஞர்களுக்கு காதலால் காத்திருக்கும் ஆபத்து பிரான்ஸ் நாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களை சேர்ந்த மோசடி கும்பல் குறித்தும் போலீசார் எச்சரித்துள்ளனர் ஆன்லைனில் காதலித்து இளம் பெண்களை ஏமாற்றும் கும்பலில் பலர் சிக்கியதாக புகார் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Toulouse இல் உள்ள இளம் பெண்ணொருவர் ஒன்லைனில் காதலித்து தோல்வி அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Toulouse நகரில் வசிக்கும் 22 வயது பெண் 26 வயது இளைஞனை காதலித்து வந்துள்ளார். அந்த இளைஞனை தன் வீட்டுக்கு வரும்படி அந்த பெண் அழைத்துள்ளார்.

சமூக வலைதளம் மூலம் இளைஞர்களை சந்திக்கவும் பெண்ணின் அழைப்பின்பேரில் வீட்டுக்கு வந்த இளைஞன் மறுநாள் சென்றுவிட்டான். ஆனால், அவர் சென்ற போது வீட்டில் இருந்த பணம், வங்கி அட்டை, கார் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் திருடி போனது தெரியவந்தது.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் கார் வேறு ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த நபர் தனக்கு நேரடியாக தெரியாத ஒருவரிடம் இருந்து வாங்கியதாக கூறினார். காதல் வேடமணிந்து காரை திருடிய நபர் பெரும் தொகைக்கு காரை மற்றவர்களுக்கு விற்றுள்ளார்.
இதுபோன்ற மோசடி செய்பவர்கள் காதல் பெயரை பயன்படுத்திய பொருட்களை திருடுவது சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளை பயன்படுத்துவது தெரியவந்தது குறித்த பெண்ணை ஏமாற்றிய நபரை போலீஸார் கண்டுபிடித்த போதிலும் அவ்வாறு செயற்பட்ட ஏனையோரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்