பல இலட்சம் மருத்துவக் காப்பீட்டாளர்களின் (Assurance maladie) தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
Hacking முறையில் இந்த தகவல்கள் திருடப்பட்டுள்ளன. மருத்துவ காப்பீட்டாளர்களின் விபரங்கள் amelipro எனும் இணையப்பக்கத்தில் சேகரிக்கப்படுகிறது. இந்த பக்கத்தினூடக மருத்துவர்கள் நோயாளிகளின் காப்பீடு தொடர்பான விபரங்களை பார்வையிட முடியும். இதில் நோயாளிகளின் பெயர், முகவரி, நோய் விபரங்கள் மற்றும் வங்கி தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ள இந்த amelipro எனும் இணையப்பக்கத்தில் உள்ள தகவல்களே கொள்ளையர்களால் (Hackers) திருடப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் இந்த தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 510,000 பேர்களது தரவுகள் திருடப்பட்டுள்ளதாகவும் காப்புறுதி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேவேளை, இந்த திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.