உக்ரைன் அகதிகளுக்காக பிரான்சில் இருந்து அவசரகால உதவிப்பொருட்களுடன் 13 கனரக வாகனங்கள் புறப்பட்டுள்ளது.
இன்று ஞாயிர்றுக்கிழமை காலை Strasbourg நகரில் இருந்து இந்த வாகனக்கள் புறப்பட்டுள்ளன. சுகாதார மற்றும் அவசர கால தேவையுடைய பொருட்களை சுமந்துகொண்டு இந்த வாகனங்கள் புறப்பட்டுள்ளன.
உக்ரைன்-போலந்து எல்லையை நோக்கி இந்த வாகனங்கள் பயணிக்கின்றது. உக்ரைனில் இருந்து இடம்பெயர்ந்து போலந்தில் அகதிகளாக குடியேறியுள்ள உக்ரேனியர்களுக்கு இந்த பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
மேற்படி உதவிப்பொருட்களை பிரான்சில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நகரசபை தலைவர்கள் இணைந்து சேகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது