பிரான்சில் வரும் வாரத்தில் குளிர்காலம் ஆரம்பிக்க உள்ளது.

வானிலை ஆய்வு மையமான Météo France இதனை இன்று திங்கட்கிழமை காலை அறிவித்துள்ளது. மார்ச் மாத இறுதியில் பிரான்சின் வெப்பநிலை கணிசமாக குறைவடைந்து - குளிரை நோக்கி செல்லும் எனவும், ஏப்ரல் 1 ஆம் திகதி அன்று பிரான்சின் Lille மற்றும் Grenoble, Aurillac போன்ற பகுதிகளில் -1 C வரை குளிர் நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கும் போது Île-de-Franc மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் பனிப்பொழிவும் பதிவாகும் எனவும் Météo France அறிவித்துள்ளது.