இன்று வியாழக்கிழமை காலை பார ஊர்தி ஒன்று சென் நதிக்குள் பாய்ந்துள்ளது.
Issy-les-Moulineaux நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலை 8 மணி அளவில் இப்பகுதியில் பயணித்த பார ஊர்தி ஒன்று திடீரென ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது. ஊர்தியில் பயணித்த சாரதி உள்ளிட்ட இருவரும் உடனடியாக மீட்க்கப்பட்டனர். இதில் சாரதி மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பின்னர் பார ஊர்தி ஒருவழியாக இழுத்து மீட்க்கப்பட்டது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. பார ஊர்தி ஆற்றுக்குள் பாய்ந்தது ஏன் என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.