பிரான்சின் Seine-Saint-Denis பிராந்தியத்தின் பல பகுதிகளில் மீளறிவித்தல் வழங்கப்படும் வரையில் இரவு நேர பேருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.நேற்றைய தினம் செவ்வாய்கிழமையிலிருந்தே இந்த பேருந்து ரத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சேவைத்தடையை எதிர்கொள்ளும் பேருந்துகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது

இம்மாவட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 24 நகரங்களில் இந்த இரத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், 900 இற்கும் அதிகமான பேருந்து நிறுத்தங்களுக்கான பேருந்து சேவை தடைப்பட்டுள்ளது. மேலும் இதனால் பிராந்தியத்தின்
இரவு எட்டுமணியில் இருந்து சேவைகள் அனைத்தும் தடைப்படுகிறது.

கடந்த இரு நாட்களாக சில நகரங்களில், இரவு நேரத்தில் பலத்த வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ள நிலையில் திங்கட்கிழமை இரவு 609 ஆம் இலக்க பேருந்து ஒன்று தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. அதையடுத்தே இந்த முடிவை எடுத்துள்ளதாக டிரான்ஸ்தேவ் (Transdev) பேருந்து போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.