பாரிஸை அண்டிய நகரங்களில் திங்களன்று இரண்டாவது நாளாக வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவும் இதே போன்று இடம்பெற்ற வன்முறையின் போது நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், திங்கட்கிழமை இரவும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது கலவர கும்பல் 11 குப்பைத் தொட்டிகள், 4 வாகனங்கள் மற்றும்
உடற்பயிற்சிக் கூடம் ஒன்றிற்கும் தீ வைத்துள்ளனர்


 
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர், மேலும் காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகச் செய்ய முயற்சிகள் மேற்கொண்ட போது காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை Sevran பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சாரதி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தப்பியோடிய குற்றவாளிகள் மீது போலீஸ் தரப்பிலிருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.காவல்துறையினரின் இச்செயலை கண்டித்தே இந்த வன்முறைகள் இரண்டாவது நாளாக இடம்பெற்று வருவதாக சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.