பிரான்ஸ்: ESSONNE இல் ஒரு பெண் போலீஸ் அதிகாரி தனது காரில் இறந்து கிடந்தார்! இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தேசிய காவல் துறையினரின் தரவரிசையில் இது 21 வது தற்கொலையாகும்.

Évry Order Service-க்கு நியமிக்கப்பட்டிருந்த 43 வயதான போலீஸ் பெண் Jennifer, புதன்கிழமை இரவு Essonne இல் தனது காரில் இறந்து கிடந்தார். முதற்கட்ட விசாரணையில் இது ஒரு தற்கொலையாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தகவல்களின்படி,‌குறித்த அதிகாரி 12 மற்றும் 16 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் என தெரிய வந்துள்ளது. புதன்கிழமை பொலிஸ் நிலையத்தில் தனது சேவை ஆயுதத்தை எடுத்துள்ளார். அதை வைத்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நேஷனல் காவல் துறை தனது ட்விட்டர் கணக்கில், ஜெனிஃபரின் குடும்பம், நண்பர்கள், சக ஊழியர்களின் வலியைப் பகிர்ந்துக்கொள்வதாகக் குறிப்பிடுகிறது. இது ஒரு வாரத்தில் 3வது தற்கொலையாகவும், ஜனவரி 1 முதல் தேசிய போலீஸ் தரவரிசையில் 21 ஆவது தற்கொலையாகும்
புதன்கிழமை மார்ச் 16 அன்று, மத்திய நீதித்துறை காவல்துறையைச் சேர்ந்த டிடியர் என்ற 60 வயது போலீஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். அவர் நான்டெர்ரேயில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் துணை இயக்குனரகத்தில் பணியாற்றினார்.