65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி போட உயர் மருத்துவத்துறை (Haute autorité de santé) பரிந்துரை செய்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘எளிதில் நோய்வாய்படக்கூடியவர்கள், எதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்கள், நீண்ட கால நோய்வாய்பட்டவர்கள்’ போன்றவர்கள் மிகவிரைவாக நான்காவது தடுப்பூசியினை போட்டுக்கொள்ளவேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் கடந்த திங்கட்கிழமை முதல் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நான்காம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காம் தடுப்பூசியினை Haute autorité de santé பரிந்துரை செய்துள்ளதால், விரைவில் மேற்படி வயதுடையவர்களுக்கு இந்த நான்காம் தடுப்பூசியினை அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது