பிரான்ஸ் இளம் பருவத்தினர் நரம்பு தளர்சியால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். டிக்டாக் செயலியின் தொடர் பயன்பாடு நரம்பு தளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறுகின்றனர்.

11 முதல் 21 வயதுடைய இருபது தன்னார்வலர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, தொற்றுநோய் மற்றும் ஊரடங்கின் போது இந்த அறிகுறிகள் மோசமடைந்ததைக் குறிப்பிடுகிறது 

இந்த நிலையில் உள்ள 20 இளைஞர்களில், பதினேழு பேர் செயலியை பயன்படுத்தியதிலிருந்து தங்கள் நடுக்கங்களின் அதிர்வெண் அதிகரித்துள்ளதாகக் கூறினர். நடுக்கங்களின் தீவிரம் 6 இல் 5 ஆக மதிப்பிடப்பட்டது.

ஏற்கனவே அக்டோபர் 2021 இல், டிக்டோக்கின் பயன்பாடு இளம் பருவத்தினருக்கு டூரெட்ஸ் நோய்க்குறியை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வு குறிப்பிட்டுள்ளது.