ILE-DE-FRANCE: PÔLE EMPLOI இன் ஊழியர் கிட்டத்தட்ட 300,000 யூரோக்களை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது! குறிப்பாக இது ஒரு அதிக லாபகரமான மோசடியாக கருதப்படுகிறது.‌

Plaisir (Yvelines) வேலைவாய்ப்பு மையத்தின் ஊழியர் ஒருவர் வேலையின்மை இழப்பீடாக கிட்டத்தட்ட 300,000 யூரோக்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.61 வயதான குறித்த நபர், இந்தத் தொகைகளுக்குத் தகுதியற்றவர்களுக்காக தவறான கோப்புகளை உருவக்கியுள்ளார்..

ஊழியர் தவறான உதவி விண்ணப்பக் கோப்புகளை அமைத்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த மோசடி மூலம், அந்த நபர் Pôle Emploi கருவூலத்தில் இருந்து சரியாக 294,000 யூரோக்களை அபகரித்துள்ளார்.

பாரிஸ் அல்லது Hauts-de-Seine ஐச் சேர்ந்த 35 முதல் 54 வயதுடைய மொத்தம் எட்டு பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். மோசமான மோசடியை மறைத்ததற்காக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.