இலங்கையில் காதலிக்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்த நான் இளைஞன் காதலர்களின் நிலை என்ன காதலர்களின் நிலை என்ன இலங்கையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பிரான்ஸ் நாட்டுக் காதலி மற்றும் காப்பாற்ற குறித்த இளைஞன் ஆகியோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில் அவர்களின் உடல் நிலை தொடர்பில் ஆராய்வதற்காகதியத்தலாவ பாதுகாப்பு படைத் தலைமையக மூத்த ராணுவ அதிகாரி இருவர்தியத்தலாவை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.


கடந்த மூன்றாம் திகதி கொழும்புவில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலில் பிரான்ஸ் இளம் ஜோடி ஒன்று பயணித்த நிலையில் செல்பி எடுக்க முயற்சித்த பெண் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். ஓடும் ரயிலில் இருந்து திடீரென விழுந்த காதலியை காப்பாற்ற காதலனும் ரயிலில் இருந்து குதித்துள்ளார்.


அப்போது ரயிலில் இருந்த மற்ற பயணிகள் அவசர மணியை ஒளிரச் செய்து ரயிலை நிறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர் . இந்த விபத்தில் குறித்த இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தலை மற்றும் காலில் காயங்களுடன் பிரான்ஸ் நாட்டு பெண் முதலில் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இந்நிலையில் இளைஞன் தற்போது மீண்டு உள்ள நிலையில் பெண் மாத்திரம் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவர்களை பார்க்க சென்ற இரு அதிகாரிகளும் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர்.