நவிகோ அட்டையின் விலையை அதிகரிக்க கணக்காய்வாளர் சங்கம் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த வருடம் பொது போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிப்படைந்திருந்தன. கணிசமான வருவாய் இழப்பை d'Île-de-France Mobilités (IDFM) நிறுவனம் (île-de-France மாகாணத்துக்கான பொதுபோகுவரத்து நிறுவனம்) சந்தித்திருந்தது. இந்த இழப்பை சமாளிக்க அரசிடம் உதவித்தொகை கோரியிருந்தது.

இந்நிலையில், மேற்படி நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்யும் கணக்காய்வாளர் சங்கம் (Cour des comptes) இந்த இழப்பை சரிசெய்ய பரிந்துரை ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி, பொது போக்குவரத்துக்கான கட்டணங்களை அதிகரிக்கும்படியும், குறிப்பாக நவிகோ அட்டையின் விலையை அதிகரிக்குமாறும் d'Île-de-France Mobilités நிறுவனத்திடம் பரிந்துரை செய்துள்ளது.

ஆனால், இந்த பரிந்துரையை பிரதமர் Jean Castex மற்றும் மாகாண முதல்வர் Valérie Pécresse ஆகிய இருவரும் ஏற்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.