தொடருந்து தொழிலாளர்களை CGT தொழிற்சங்கம் பணி புறக்கணிப்புக்கு அழைத்துள்ளது.
பெப்ரவரி 18 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை தொடருந்து ஊழியர்களின் இந்த பணி புறக்கணிப்பு இடம்பெற உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுக்ளுக்கான ஊதிய உயர்வை ஊழியர்கள் கோரியுள்ளனர். 0.4% வீத ஊதிய உயர்வு கோரி இவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபடுகின்றதாக அறிய முடிகிறது.
அதேவேளை, CGT தவிர்த்து, FO, Unsa, Solidaires மற்றும் La Base ஆகிய தொழிற்சங்கங்களும் தங்களது ஊழியர்களை பணி நிறுத்தத்துக்கு அழைத்துள்ளனர்