பிரான்சில் புதிதாக பரவி வரும் BA.2 திரிபு வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருவதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.

குறித்த BA.2 திரிபு வைரஸ் ஒமிக்ரோன் தொற்றின் துணை திரிபு எனக் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 2 சதவீதமாக இருந்த இதன் பரவல் தற்போது 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

குறித்த திரினது மிகுந்த ஆபத்து விளைவிக்காது என்றாலும் இதன் பரவல் தற்போது மெல்ல உயர்ந்து வருவதாக Santé publique France தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிரான்சில் தற்போது கொரோனா பரவல் வீழ்ச்சியை நோக்கி சென்றாலும், ஒமிக்ரோன் திரிபு மீண்டும் அதை வேகப்படும் ஆபத்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.