Bobigny காவல்நிலையத்துக்குள் திடீர் வெள்ளம் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று புதன்கிழமை பெப்ரவரி 17 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வெள்ளம் மழையினால் ஏற்பட்டதல்ல. மாறாக தண்ணீர் குழாய் வெடித்ததில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆகும். 
 
    பொபினி காவல்நிலையம் முதன் முறையாக இவ்வாறான பிரச்சனையை எதிர்கொள்கின்றது. காவல்நிலையத்துக்குள் தண்ணீர் வெள்ளம் ஐந்து செ.மீ வரை ஏற்பட்டது!
என காவல்துறை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 
 
* கடந்த 2018 ஆம் ஆண்டில் முன்னாள் உள்துறை அமைச்சர் Gérard Collomb, காவல்நிலைய கட்டிடங்களை புனரமைக்க 196 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்குவதாக அறிவித்திருந்தார்.