அமெரிக்காவின் பிரபல இலத்திரனியல் வணிக நிறுவனமான அமேசான் பிரான்ஸில் புதிதாக வேலை வாய்ப்புக்களை உருவாக்க விரும்புகிறது.

இதன்படி 2021 ஆம் ஆண்டில் 3,000 பேரை நிரந்தர ஒப்பந்தங்களில் சேர்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

இத்திட்டம் செயற்படுத்தப்படும் பட்சத்தில்,பிரான்ஸில் ஆண்டு இறுதிக்குள் அதன் மொத்த நிரந்தர பணியாளர்களின் எண்ணிக்கையை 14,500 ஆல் அதிகரிக்குமென புதன்கிழமை வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய ஊழியர்கள் சந்திப்படுத்தல் ,பொறியாளர்கள், இளம் பட்டதாரிகள், மனிதவள மேலாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள், போன்ற பிரிவுகளின் கீழ் இணைக்கப்படவுள்ளனர் என்று நிறுவனம் விளக்குகிறது.

மேலும் இது “அமேசானின் லொஜிஸ்டிக் நெட்வெர்க்கிற்குள் செய்யப்படும் ஆட்சேர்ப்புகளின் ஒரு பகுதியாக இருக்கும்” பேல் பணியாளருடனான ஒரு தேசிய ஒப்பந்தம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

2020 நவம்பர் தொடக்கத்தில், அமேசான் நிறுவனத்தின் பிரெஞ்சு பொது மேலாளர் ஃப்ரெடெரிக் டுவால் பிரான்ஸில் “9,300 நேரடி ஊழியர்கள்” விண்ணப்பங்களை கோரினார்கள் என்று கூறினார், இதில் 2,200 பேர் அமேசானால் நிரந்தர ஊழியர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

2021 ஆம் ஆண்டில், இந்த ஆட்சேர்ப்புகளால் உள்வாங்கப்படவுள்ள பகுதிகள், முக்கியத்துவத்தின் வரிசையில், ஐலே-டி-பிரான்ஸ், ஹாட்ஸ்-டி-பிரான்ஸ், சென்டர்-வால்-டி-லோயர், ஆவெர்க்னே-ரோன்-ஆல்ப்ஸ் மற்றும் கிராண்ட்-ஈஸ்ட்.

நிறுவனம் “பன்முகத்தன்மை மற்றும் ஆட்சேர்ப்பில் சம வாய்ப்புகள்” மீதான தனது உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது, குறிப்பாக அண்டை நாடுகளிலிருந்தும் இளைஞர்களை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறது.

இந்த வேலைவாய்ப்புகளைப் பற்றி கேட்டபோது, அமேசானில் உள்ள முன்னணி தொழிற்சங்க அமைப்பான சுட் காமர்ஸ் கூட்டமைப்பின் இணை பிரதிநிதி லாரன்ட் டெகோசே, “மிகவும் மகிழ்ச்சியாக” இருப்பதாகக் கூறினார். “

அவர் மேலும் தெரிவிக்கையில் அமேசானில், ஏராளமான தற்காலிக தொழிலாளர்கள் உள்ளனர், ஆகவே இந்த ஆட்சேர்ப்பில் தற்காலிக தொழிலாளர்களுக்கு அவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.

அமேசான் நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டில் பிரான்சில் 5.7 பில்லியன் யூரோ வருவாயை ஈட்டியதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2021 ஆம் ஆண்டில் விநியோகத்தை மையமாகக் கொண்டு நாட்டில் ஒரு டசின் தளங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது அமேசான் .