அட்லாண்டிக்கின் கடல்சார் ப்ரிபெக்சரின் செய்திக்குறிப்பில் விடுமுறைக்காக சென்ற பாரிஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த மாணவர்களின் குழுவில் அங்கம் வகித்த அந்த இளம் பெண்ணின் ஆண் நண்பர். அவரைச் சமாதானப் படுத்தும் நோக்கோடு தண்ணீருக்குள் அழைத்து சென்றதாகக் குறிப்பிடுகிறது.
எச்சரிக்கையோடு இருந்த அவசர சேவைகள் ஹெலிகாப்டரின் உதவியுடன் விரைந்து செயற்பட்டதாகவும், அங்கு சென்றதும், பாதிக்கப்பட்ட இருவரையும் கண்டுபிடித்து அவர்களை தண்ணீரிலிருந்து வெளியேற்ற முயற்சித்ததாகவும் தெரிகின்றது.
தனது நண்பரைக் காப்பாற்ரற வந்த இளைஞன் “தாழ்வெப்பநிலை நிலையில்” மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அட்லாண்டிக்கின் கடல்சார் ப்ரிபெக்சர் தெரிவிக்கின்றது. மேலும் தண்ணீரில் விழுந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு குறித்த இளம் பெண் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டானியில் ஏராளமான பனியுடன் கூடிய குளிர், நீர் மேலும் குளிர்வித்திருந்தது. விபத்தின் துல்லியமான சூழ்நிலைகளைத் தீர்மானிக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஓயஸ்ட்-பிரான்ஸ் குறிப்பிடுகிறது.