வேலையில்லாதோர் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகவும், குறிப்பாக இவ்வருடத்தின் முதல் காலாண்டில் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தொழிலாளர் அமைச்சு (ministère du Travail) அறிவித்துள்ளது.
குறிப்பாக A வகை (catégorie A ) பிரிவில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை 5.3% வீதத்தால் இக்காலாண்டில் (ஜனவர் 1 தொடக்கம் ஏப்ரல் 15 வரை) வீழ்ச்சியடைந்துள்ளது. கிட்டத்தட்ட 164,700 பேர் இந்த காலாண்டில் வேலை பெற்றுள்ளனர்.
அதேவேளை, வகை B மற்றும் வகை C ( catégorie A, B) பிரிவில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த ஒரு வருடத்தில் 16.5% வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள தொழிலாளர் அமைச்சு, கடந்த பல மாதங்களாக தொடர்ச்சியாக வேலையில்லாதோர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.