பிரான்ஸில் உள்ள பிரபல பீர் தாயாரிக்கும் நிறுவனமான Ice Breaker Brewing மிஞ்சிய Donut ஐ வைத்து இனிப்பு-சுவையில் உள்ள பீர் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஒரு, அறிக்கையின்படி , இந்த மதுபானம் விற்கப்படாத Donut ஐ வைத்து உற்பத்தி செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது.

இந்த பீரை உருவாக்க , துலூஸ் Brewer சிறப்பு பிராண்டான CocoRosa Donuts உடன் இணைந்துள்ளது.”ஜனவரி மாதம் முழுவதும் தினசரி விற்பனையாகாத Donut ஐ சேகரித்து, மேலும் அவற்றை பார்லி, கோதுமை மற்றும் மால்ட் ஓட்ஸுடன் சேர்த்து ஒரு கலவையாக தாயாரித்து வைக்கப்படும். இது, மாஷ் ஸ்டேஜ் (Mash stage) என்று அழைக்கப்படும் என்று மதுபானம் தயாரிப்பவர் டான் லெடெல்லியர் விளக்குகிறார்.

Donut Disturb‌ என்று அழைக்கப்படும் இந்த பானம் பீர் தளத்திலோ அல்லது மதுபான ஆலையின் இணையதளத்திலோ வரையறுக்கப்பட்ட பதிப்பில் கிடைக்கிறது. மேலும் “இதற்கு சில மறுவிற்பனையாளர்கள் உள்ளனர்”.

மேலும், துலூஸில், இரண்டு அசல் பீர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்கிறார். முதல், Froot Bandicoot, சேதமடைந்த பழங்களை வைத்து தயாரிக்கப்படும் மற்றும் இரண்டாவது, Nothing Toulouse, அதாவது விற்கப்படாத சாக்லேட்களளைக்   கொண்டு செய்யப்பட்டது என கூறுகிறார்.